ஈரானின் ஹார்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான பந்தர் அப்பாஸின் தென்மேற்கில் 100 கிலோ மீட்டர் தொலைவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6-ஆக பதிவாகி உள்ளது. இதனால், வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதில் மக்கள் அதிர்ச்சியடைந்து வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும், கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சயே கோஷ் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஈரானின் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட ஒரு நிமிடத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு 6-ஆக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.