சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித்தலைவர்கள் கூட்டம் இன்று பிற்பகல்!

0
170
Article Top Ad

நாட்டின் எதிர்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று (11) கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதன் பின்னர், புதிய ஜனாதிபதியை நியமிப்பது மற்றும் புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் இன்றைய கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளது.

இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பிரதான அரசியல் கட்சிகளுக்கிடையில் இன்று விசேட கலந்துரையாடல்கள் பல நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.