பாராளுமன்றில் 20ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் போட்டியிடவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அனுரகுமார திஸாநாயக்க வேட்பாளராக களமிறக்கப்படவுள்ளதாகவும் அனைத்து கட்சிகளும் தமக்கு ஆதரவு வழங்கினால் இடைக்கால அரசாங்கமொன்றை அமைத்து பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தயார் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சஜித் பிரேமதாச, டலஸ் அழகப்பெரும, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
இதனால தற்போது நான்குமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவுக்குள் பாரிய பிளவுகள் ஏற்பட்டு வாக்குகள் சிதறும் நிலை உள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அந்த சந்தர்ப்பத்தை சஜித் தரப்பு சரியாக பயன்படுத்திக்கொண்டால் வெற்றிபெறுவதறகான வாய்ப்புகள் உள்ளதாகவும் அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.