ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே அரசாங்கமே காரணமென குற்றம் சாட்டினார்.
ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய பிரேமதாசா, “தவறான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று எதிர்க்கட்சிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக அரசாங்கத்திடம் கூறி வந்தன. அவர்கள் ஒருபோதும் செவிசாய்க்கவில்லை. நாங்கள் இப்போது ஒரு பேரழிவு நிலையில் இருக்கிறோம். பொருளாதாரக் கடனில் இருந்து மீள்வதற்கான திட்டம் தன்னிடம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை தெரிவு செய்கிறோம். பாராளுமன்றம் கோட்டாபய ராஜபக்சவின் பெரும்பான்மையை கொண்டுள்ளது. இந்த அமைப்பில் இருந்து ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவார். நான் என் பெயரைக் கொடுத்துள்ளேன். என்ன நடக்கிறது என்று பார்க்கிறேன். நாங்கள் அனைத்து உறுப்பினர்களுடனும் பேசி வருகிறோம். தற்போதைய பாராளுமன்றம் பெரும்பாலான மக்களின் கருத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
“வழக்கமாக, இலங்கையின் ஜனாதிபதியை மக்கள் தெரிவு செய்கிறார்கள். 22 மில்லியன் மக்களே வாக்காளர்கள். வாக்களிக்கும் வயதை எட்டியவர்கள், அனைவரும் தங்கள் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தற்போது 225 பாராளுமன்ற உறுப்பினர்களே ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டியுள்ளது. இந்த பாராளுமன்றம் கோட்டாபய ராஜபக்சவின் சட்டமன்ற பெரும்பான்மையை கொண்டது. எனவே அந்த குறிப்பிட்ட அமைப்பில் இருந்துதான் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் அவர் கூறினார்.