இராணுவத் தாக்குதல் அமைதியான போராட்டக்காரர்களுக்கு அச்சுறுத்தல் ; ஐநா!

0
118
Article Top Ad

காலி முகத்திடலில் நடைபெற்ற போராட்டத் தளத்தில் நடந்த இராணுவத் தாக்குதல் அமைதியான போராட்டக்காரர்களுக்கு “சிலிர்க்க வைக்கும் செய்தியை” அனுப்புவதாக ஐநா மனித உரிமை பேரவை தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் பேச்சாளர் ஜெரமி லாரன்ஸ், கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் உள்ள போராட்ட முகாமை உடைப்பதற்கு பாதுகாப்பு படையினர் “தேவையற்ற பலத்தை பயன்படுத்தியதால்” தாங்கள் பீதியடைந்துள்ளதாக கூறினார்.

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள், வாழ்வாதாரம், குடும்பங்களின் நல்வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் பகிரங்கமாக வெளிப்படுத்துவதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு.

சம்பவ இடத்தில் துருப்புக்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் செய்திகளைக் கண்டித்த அவர், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு ஆர்ப்பாட்டங்களைக் கண்காணித்து அறிக்கையிட உரிமை உள்ளதாகவும், எனவே இந்தச் செயல்பாடுகளை மேற்கொள்ளும்போது எந்த வகையிலும் இடையூறு செய்யக்கூடாது.

அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிரான பலாத்காரம் சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்று கூறிய பேச்சாளர், இலங்கை அதிகாரிகளை உடனடியாக இதனை நிறுத்த வேண்டும்.

பொருந்தக்கூடிய சர்வதேச சட்டத்தின் கீழ், விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே கூட்டங்கள் கலைக்கப்பட முடியும். இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை பலவந்தமாக தீர்க்க முடியாது.

பரந்த ஆலோசனைகள் மற்றும் உரையாடல்களின் ஊடாகவே சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் இலங்கையர்கள் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்ப ஆரம்பிக்கின்றனர்.

புதிய ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் அனைத்து இலங்கையர்களின் நலனுக்காக உண்மையான கட்டமைப்பு மற்றும் நிறுவன சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கு தண்டனையின்றி தீர்வு காண்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.