ஜனாதிபதியுடன் பிரித்தானிய அமைச்சர் கலந்துரையாடல்!

0
120
Article Top Ad

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரித்தானிய பாராளுமன்றத்தில் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட்கும் இடையில் தொலைபேசி கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

அமைதியான போராட்டங்கள், ஊடக சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் நீதி தொடர்பான உரிமைகள் குறித்து கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தியதாக அமைச்சர் தரிக் அஹமட் தமது டுவிட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள சவால்களுக்கு மத்தியில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்க பிரித்தானியா தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.