திரவுபதி முர்முவுக்கு ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து

0
105
Article Top Ad

இந்திய ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

இதையடுத்து புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழா இன்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது.

இதற்கிடையே, பாராளுமன்ற மைய மண்டபத்தில் நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள், கவர்னர்கள், முதல் மந்திரிகள், முப்படை தளபதிகள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள திரவுபதி முர்முவுக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து தெரிவித்துள்ளார்.