தமிழக அரசாங்கத்திடமிருந்து இலங்கைக்கு நன்கொடை!

0
140
Article Top Ad

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தமிழக அரசால், இலங்கை அரசுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 3.4 பில்லியன் மதிப்பிலான மனிதாபிமான பொருட்களை இன்று சுகாதார இலங்கை அரசிடம் கையளித்தார்.

இந்த நன்கொடைகளை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரிடம் கொழும்பு துறைமுகத்தில் வைத்து இந்திய தூதுவர் கையளித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தமிழகத்தில் இருந்து 40,000 மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால் மா மற்றும் 100 மெட்ரிக் டன் மருந்துகள் (மருந்துகளின் மொத்த மதிப்பு சுமார் 22 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆகிய பொருட்கள் நன்கொடையாக இலங்கைக்கு வழங்கப்பட்டசத்தாக ட்விட்டர் செய்தியில், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கூறியுள்ளார்.