பாராளுமன்றில் அவசரகால சட்டம் நிறைவேற்றம்!

0
120
Article Top Ad

அவசரகாலச் சட்டம் பாராளுமன்றத்தில் 52 மேலதிக வாக்குகள் வித்தியாத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அவசரகாலச் சட்டம் தொடர்பான விவாதம் இன்று பாராளுமன்றில் நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக இருந்த போது பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவசரநிலையை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்தார். இந்த அறிவிப்பை வெளியிட்ட 14 நாட்களுக்குள் பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும், இல்லையெனில் அது ரத்து செய்யப்படும்.

அதன் பிரகாரம் அவசரகால சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.