இலங்கை அணி வலுவான நிலையில் ; பாகிஸ்தானுக்கு 508 ஓட்டங்கள் வெற்றியிலக்கு!

0
125
Article Top Ad

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் இன்று நான்காவது நாளாக இடம்பெற்று வருகின்றது. நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன் அடிப்படையில் தனது முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 378 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் தினேஸ் சந்திமால் அதிகபட்சமாக 80 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 51 ஓட்டங்களையும் மற்றும் ஓசத பெர்ணான்டோ 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் நஷீம் ஷா மற்றும் யாசிர் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர்.

பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸை விளையாடிய பாதிஸ்தான் அணி சகல விக்கெட்களையும் இழந்து 231 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் சல்மான் அதிகபட்சமாக 62 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் ரமேஷ் மென்டிஸ் 5 விக்கெட்களையும், பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர். அதனடிப்படையில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை அணி 147 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது.

பதிலுக்கு தமது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 8 விக்கெட்களை இழந்து 360 ஓட்டங்கள் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் போட்டியை இடைநிறுத்தியது. இலங்கை அணி சார்பில் உப தலைவர் தனஞ்சய சில்வா 109 ஓட்டங்களையும், அணித்தலைவர் திமுத் கருணரத்ன 61 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

அதனடிப்படையில் பாகிஸ்தான் அணிக்கு 508 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.