துடிப்பான கலாச்சாரம் கொண்ட தமிழகம், தமிழ் மொழியின் தாயகம்!

0
150
Article Top Ad

சென்னை நேரு விளையாட்டு அரங்கில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் வணக்கம் என தமிழில் கூறி தனது உரையை பிரதமர் மோடி தொடங்கினார்.

மேலும் ‘இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி உரையாற்றினார். பின்னர் அவர் கூறியதாவது:- சிறப்பான ஒரு தருணத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவிற்கு வந்துள்ளது.

தமிழகத்திற்கும் சதுரங்க விளையாட்டிற்கும் நீண்ட வரலாற்று தொடர்பு உள்ளது. தமிழகத்தில் இருந்து பல கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகியுள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களிலுள்ள சிற்பங்கள் பல்வேறு விளையாட்டுகளை குறிக்கும் விதமாக அமைந்துள்ளது.

துடிப்பான கலாச்சாரம் கொண்ட தமிழகம், தமிழ் மொழியின் தாயகமாகும். பல விளையாட்டுப் போட்டிகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன. இந்தியாவின் விளையாட்டு கலாச்சாரம் மேம்பட்டுள்ளது. கிராமங்கள், நகரங்களில் உள்ள நமது வீரர்கள் வெற்றிகளை ஈட்டும் காலகட்டம் இது. இவ்வாறு அவர் கூறினார்.