இலங்கைக்கு உதவ இந்தியா உறுதி பூண்டுள்ளது – திரவுபதி முர்மு ஜனாதிபதிக்கு கடிதம்!

0
155
Article Top Ad

இந்திய குடியரசுத் தலைவராக பதவியேற்றுள்ள திரவுபதி முர்முவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ரணிலுக்கு, முர்மு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: நான் பதவியேற்றதற்கு உங்கள் அன்பான வாழ்த்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

இலங்கையில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற உங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் மிக நெருங்கிய அண்டை நாடான இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது.

இலங்கை இந்தியா இடையே இருதரப்பு கூட்டு உறவு நீண்ட கால அடிப்படையிலானது. பாரம்பரியம் மற்றும் இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவுகளின் அடிப்படையில் அது மேலும் வலுவடையும். இலங்கை ஜனாதிபதிக்கான பொறுப்புகளில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.