துனீஸியாவில் சர்வாதிகார ஆட்சிக்கு வித்திடும் ஜனாதிபதி கைஸ்ஸெய்டின் போக்குகளை ஆபிரிக்க யூனியன் பொருட்படுத்தாதிருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.
2014 இல் கொண்டுவரப்பட்ட அந்நாட்டு அரசியலமைப்புக்கு முரணாக துனீஸிய ஜனாபதி நடந்துகொள்வது அவரது தனிப்பட்ட அதிகாரத்தை நிலைப்படுத்துவதற்காகவே என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
2021 ஜூலையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற கைஸ்ஸெய்ட் படிப்படியாக அரசியலமைப்பை மீறும் வகையில் நடந்து வருகிறார். பிரதமரை பதவிநீக்கியமை நீதியரசர்களை சிறையில் அடைத்தல் மற்றும் புதிய அரசியலமைப்பு ஒன்றை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகள் என்பவை அவற்றில் சிலவாகும்.
அரபுவசந்த புரட்சிக்குப்பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பை மீறிச்செயற்படும் துனீஸிய ஜனாதிபதியை ஆபிரிக்க யூனியன் கண்டுகொள்ளாதிருப்பதாக பொதுவாக விமர்சிக்கப்படுகிறது.