Article Top Ad
சமூக ஆர்வலரும் யூடியூபருமான ‘ரட்டா’ என அழைக்கப்படும் ரதிந்து சேனாரத்னவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
மே 21ஆம் திகதி கொழும்பு இலங்கை வங்கி மாவத்தையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு குற்றப்பிரிவு – கொழும்பு மத்திய அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 01) அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சமூக ஆர்வலர் ரதிந்து சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவும் பிறப்பித்துள்ளார்.