ஹெலிகாப்டரில் தொங்கியபடி அதிகமுறை ‘புல்-அப்ஸ்’ எடுத்து கின்னஸ் சாதனை!

0
172
Article Top Ad

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டான் பிரவுனி, அர்ஜென் ஆல்பர்ஸ் ஆகியோர் யுடியூப் சேனலை நடத்தி வருகிறார்கள். உடற்பயிற்சி ஆர்வலர்களான இவர்கள் ஹெலிகாப்டரில் தொங்கியபடி ஒரு நிமிடத்தில் அதிக முறை புல்- அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்தனர்.

பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப்பில் உள்ள ஹொவெனன் விமான தளத்தில், ஹெலிகாப்டர் குறிப்பிட்ட அடி உயரத்தில் ஒரே நிலையில் அசையாமல் பறந்து கொண்டிருந்தபோது அடிப்பகுதியில் உள்ள கம்பியை பிடித்து கொண்டு புல்-அப்ஸ் செய்தனர். முதலில் அர்ஜென் ஆல்பர்ஸ், ஹெலிகாப்டரில் தொங்கியபடி ஒரு நிமிடத்தில் 24 முறை புல்-அப்ஸ் எடுத்தார்.

இதனால் முன்பு 23 முறை புல்-அப்ஸ் எடுத்திருந்த அர்மேனியாவின் ரோமன் சஹ்ரத்யனின் சாதனையை முறியடித்தார். அர்ஜென் ஆல்பரிசுக்கு பிறகு 2-வதாக ஸ்டான் பிரவுனி ஹெலிகாப்டரில் தொங்கியபடி புல்-அப்ஸ் எடுத்தார். அவர் ஒரு நிமிடத்தில் 25 முறை புல்-அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்தார். அர்ஜென் ஆல்பர்ஸ் 2-ம் இடம் பிடித்தார்.