பிரதமர் தினேஷ் குணவர்தன, நாட்டிற்கு வழங்கிய தாராள மனிதாபிமான உதவிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த நட்புறவு மலர்ந்துள்ளதாக பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துக் கடிதத்திற்கு பதிலளித்த இலங்கை பிரதமர் பதிலளித்துள்ளார்.
“இந்தியாவும் இலங்கையும் பல துறைகளில் பரஸ்பரம் பலனளிக்கும் கூட்டாண்மையாக பல ஆண்டுகளாக நட்புறவுடன் பணியாற்றி வருகிறது எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை இலங்கைக்கு வழங்க எதிர்பார்பதாக இந்திய பிரதமர் இலங்கை பிரதமமரிடம் உறுதியளித்துள்ளார்.
இலங்கை மக்களின் செழிப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிசெய்து, விரைவான பொருளாதார மீட்சியை காண ஒத்துழைப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு தேவைக்கேற்ப பொருளாதார உதவிகளை வழங்குவதில் இந்தியா முன்னணியில் இருப்பதுடன், தேவைப்படும் நேரத்தில் அதிகபட்ச உதவிகளை வழங்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. மற்றும் அரசாங்கம் அதன் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தவில்லை. 5.7 மில்லியன் மக்களுக்கு “உடனடி மனிதாபிமான உதவி தேவை” என்று ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கையும் விடுத்தது.
கடந்த இரண்டு மாதங்களில் இந்திய அரசாங்கத்தாலும் மக்களாலும் நன்கொடையாக வழங்கப்பட்ட 25 டன்களுக்கும் அதிகமான மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் இலங்கை ரூபாய் (SLR) 370 மில்லியன் மதிப்புடையது. சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான பொருளாதார உதவி மற்றும் அரிசி, பால் பவுடர் மற்றும் மண்ணெண்ணெய் போன்ற பிற மனிதாபிமானப் பொருட்களும் இந்தியா வழங்கியுள்ளது.