ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் (WFP) இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் நாட்டின் வறிய மக்களுக்கான உணவுப் பொருட்களில் பர்ராகுறை ஏற்படுவது குறித்து கவலை கொண்டுள்ளது.
ஏறக்குறைய 6.3 மில்லியன் மக்கள், அல்லது 10 குடும்பங்களில் மூன்று பேர், உணவுப் பாதுகாப்பின்மை அபாயத்தில் உள்ளதுடன் உதவி தேவைப்படுகிறது.
சமீபத்திய WFP ஆய்வுகள், 61 சதவீத குடும்பங்கள் குறைவான உணவை உட்கொள்கின்றனர். குறைவான சத்துள்ள உணவையே இவர்கள் சாப்பிடுகிறார்கள். அதேபோன்று இருவேளை உணவை முற்றிலுமாக கைவிடுகிறார்கள் என்றும் WFP ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச் சத்து குறைபாட்டினால் அதிகம் ஆபத்தில் உள்ள 3.4 மில்லியன் மக்களுக்கு உதவ அவசரகால வேலைத்திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
சுமார் 22 மில்லியன் மக்கள்தொகை கொண்ட இலங்கை நாடு, 1948 இல் சுதந்திரம் பெற்றதிலிருந்து அதன் மோசமான பொருளாதார நெருக்கடியின் மத்தியில் உள்ளது.
51 பில்லியன் டாலர் வெளிநாட்டு கடனில் உள்ளது. எரிபொருள், மருந்துகள் மற்றும் சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய பணம் இல்லாமல் இருந்தது.
உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது மற்றும் பணவீக்கம் ஏற்கனவே 60 சதவீதத்திற்கு மேல் உள்ளது.
“தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் தாக்கம் இலங்கை மக்களுக்கு ஏற்படுவது குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்” என நோர்வே தூதுவர் ட்ரைன் ஜோரன்லி எஸ்கெடால் தெரிவித்துள்ளார்.
WFP ஊடாக இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க நேர்வே நடவடிக்கைகளை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Agencies-