வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் பெயர் மாத்திரமே தமிழில் இருக்கின்றது என்றும், அவருக்கு தமிழ் தெரியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே சிறீதரன் எம்.பி இதனை குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் முன்பள்ளிகள் சில இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு பிரிவினரால் நிர்வகிக்கப்படுவதுடன், அவற்றின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளதாக சிறீதரன் எம்.பி பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாக அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் வடக்கு ஆளுநருக்கு அறிவித்த போதும், அது தொடர்பில் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அவர் தமிழே தெரியாத சிங்களவரே என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று அவரை திட்டமிட்டே ஆட்சியாளர்கள் நியமித்துள்ளனர் என்றும், அவரை மாற்றுவதற்கு எவரும் தயாராக இல்லை என்றே தெரிவதாகவும் சிறீதரன் கூறியுள்ளார்.