சீன ஆராய்ச்சிக் கப்பலின் பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுப்பதாகக் கூறப்படும் கூற்றை இந்தியா நிராகரித்துள்ளது.
சீனாவின் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5 அம்பாந்தோட்டைக்கு விஜயம் செய்ய இலங்கைக்கு சீனா அழுத்தம் கொடுக்கிறது என்று கூறிய சீனாவின் தூண்டுதலை இந்தியா இன்று திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வாராந்திர செய்தியாளர் சந்திப்பின் போது, சீன கப்பல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார்.
இலங்கை ஒரு இறையாண்மை கொண்ட நாடு மற்றும் அதன் சொந்த சுதந்திரமான முடிவுகளை எடுக்கும்.
இரு நாடுகளின் இருதரப்பு உறவுகள் குறித்து பேசிய செய்தித் தொடர்பாளர், இந்தியாவின் அண்டை நாடுகளின் முதல் கொள்கையில் இலங்கை முக்கியமானது. இந்த வருடம் இந்தியா தீவிரமான பொருளாதார நிலைமையை சீர்செய்ய 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை முன்னெப்போதும் இல்லாத ஆதரவை இந்தியா வழங்கியுள்ளது.
இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா முழு ஆதரவளிக்கும்.
“பரஸ்பர மரியாதை, பரஸ்பர உணர்திறன் மற்றும் பரஸ்பர நலன்களின் அவசியம், இருதரப்பு உறவுகளின் வளர்ச்சியின் அடிப்படையாக கொண்டு நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.”
730 அடி நீளம் கொண்ட சீனக் கப்பல் ஆகஸ்ட் 11 மற்றும் 17 க்கு இடையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த திட்டமிடப்பட்டது. இருப்பினும், வருகையை ஒத்திவைக்க பெய்ஜிங்கிடம் இலங்கை கோரிக்கை விடுத்தது.
இந்தியா இந்த விஷயத்தில் வலுவான கவலைகளை தெரிவித்ததை அடுத்து, அதன் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு முன்னேற்றத்தையும் கவனமாகக் கண்காணித்து. அவற்றைப் பாதுகாக்க தேவையான அனைத்தையும் எடுத்துக்கொள்வதாகக் கூறியதை அடுத்து, ஒத்திவைப்புக்கான கோரிக்கை வந்தது.
இந்தியாவின் கவலைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சீனா, “சம்பந்தப்பட்ட தரப்பினர்” அதன் சட்டபூர்வமான கடல்சார் நடவடிக்கைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பார்கள் என்று நம்புவதாகக் அவர் கூறியதுடன், பாதுகாப்புக் கவலைகளை மேற்கோள்காட்டி கொழும்புக்கு “அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது” என்று வலியுறுத்தினார்.