சர்வகட்சி வேலைத்திட்டம் ; இரு வாரங்களில் இறுதித் தீர்மானம்!

0
128
Article Top Ad

சர்வகட்சி வேலைத்திட்டத்தின் கீழ் முக்கிய பதவிகளை பகிர்ந்தளிப்பது தொடர்பில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் அரசாங்கம் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளும் என அறிய முடிகிறது.

பாராளுமன்றத்தின் நிறைவேற்று சபையை உருவாக்குதல் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சிக்கிடையில் பல்வேறு பாராளுமன்ற பதவிகள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களை நியமிப்பது தொடர்பிலும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட உள்ளது.

சர்வகட்சி வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய பேச்சுவார்த்தைகள் முன்னேற்றமடைந்துள்ளதாகவும் அது தொடர்பான முழுமையான விபரங்களுடனான அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அரசதரப்பு செய்திகள் மூலம் அறியமுடிகிறது.