சீன கப்பலை தமிழ்நாடு கடற் பகுதியில் 24 மணி நேரமும் கண்காணிகும் இந்தியா

0
146
Article Top Ad

இந்தியாவின் எல்லை பகுதியையொட்டி இலங்கை அமைந்துள்ளது. தனுஷ்கோடியில் இந்திய கடலோர காவல் படை கப்பல் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவின் எல்லை பகுதியையொட்டி இலங்கை அமைந்துள்ளது. இந்த நிலையில் சீன உளவு கப்பல் என்று கூறப்படும் ‘Yuan Wang 5’ எனும் கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது.

இந்தியாவின் கடும் விசனத்திற்கு மத்தியில் இந்த கப்பல் இலங்கை அரசின் அனுமதியுடன் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை அம்பாந்தோட்டை துறைமத்தில் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளள்ளது.

இந்த காலக்கட்டத்தில் கப்பலில் எரிபொருள் நிரப்பும் பணி மேற்கொள்ளப்படும் என்று சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கப்பல் நிபந்தனைக்கு உட்பட்டு தொலைத் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சீன கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஒரு வாரம் நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தென் இந்தியாவில் உள்ள இராணுவ நிலையங்களையும், அணுமின் நிலையங்களையும் அது கண்காணிக்கும் அபாயம் உள்ளதாக சந்தேகிக்கப்படுவதால், இந்தியா பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளது.

முக்கியமாக தமிழக கடலோர பகுதிகளை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது. ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி முழுவதும் இந்திய பாதுகாப்பு படையின் தீவிர கண்காணிப்பில் உள்ளது.

தனுஷ்கோடியில் இந்திய கடலோர காவல் படை கப்பல் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தின் பாக்குநீரிணை மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ளதால் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான ஹோவர் கிராப்ட் (hovercraft) கப்பல் உள்ளிட்ட 8 கப்பல்களும், 2 விமானம், 3 ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பு படை வீரர்கள் இடைவிடாத ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.