புதிய மைல்கல்லை எட்டினார் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா!

0
113
Article Top Ad

இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லார்ட்சில் மைதானத்தில் நடந்தது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 165 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா அணி 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 2-வது இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 149 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ரபாடா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய 7 தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் ஸ்டெயின் 439 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார். 2 முதல் 6-வது இடங்கள் முறையே ஷான் பொல்லாக், நிதினி, டொனால்ட், மோர்னே மார்கல், கல்லீஸ் ஆகியோர் உள்ளனர்.