இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இலங்கை அரசாங்கம் இரத்துச் செய்ய வேண்டும் என்பது புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தெரிவிப்பதாக வார இறுதி பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
இந்தச் சட்டம் நீக்கப்படும் வரை இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளப் போவதில்லை என்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனடிப்படையில் இந்த சட்டத்தை உடனடியாக நீக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட பல தமிழ் கட்சிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
ஆனால், இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்து, சர்வதேச அங்கீகாரத்துடன் புதிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மட்டும் கொண்டுவர அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
இன்னும் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக உள்ள பல புலம்பெயர் அமைப்புகளின் மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் தமிழ் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.