ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை 3-0 என கைப்பற்றியது இந்தியா!

0
119
Article Top Ad

இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஹராரேவில் நடைபெற்றது.

நாணயசுழற்சியில் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய ஷுப்மான் கில் சர்வதேச போட்டிகளில் ஷுப்மான் முதல் சதம் அடித்தார்.

அவர் 130 ரன்னில் வெளியேறினார். இஷான் கிஷன் அரை சதமடித்து 50 ரன்னில் அவுட்டானார். கே.எல்.ராகுல் 40 ரன்னிலும், தவான் 30 ரன்னிலும் அவுட்டாகினர். ஜிம்பாப்வே அணி சார்பில் பிராட் எவான்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. சீரான இடைவெளியில் அந்த அணியின் விக்கெட்கள் வீழ்ந்தது. ஆனாலும் சிக்கந்தர் ராசா தனி ஆளாகப் போராடினார். அவர் சதமடித்து அசத்தினார். 8-வது விக்கெட்டுக்கு சிக்கந்தர் ராசா, எவான்ஸ் ஜோடி 104 ரன்கள் சேர்த்து அசத்தியது. சிக்கந்தர் ராசா 115 ரன்னில் ஆட்டமிழந்தார். சீன் வில்லியம்ஸ் 45 ரன்னில் அவுட்டானார். இறுதியில், ஜிம்பாப்வே அணி 276 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. இந்தியா சார்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், அக்சர் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.