Article Top Ad
2020-ம் ஆண்டு கொரோனா தீவிரமாக பரவத்தொடங்கியபோது, பதறிக்கொண்டே கட்டுப்பாடுகளை விதித்த நாடுகள் இப்போது அந்த கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொண்டிருக்கின்றன என்பது உண்மை.
இந்நிலையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் அவருக்கு லேசான அறிகுறிகளுடன் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து, புமியோ கிஷிடா தனிமைப்படுத்தப்பட்டு தற்போது பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார் என பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.