இலங்கை அரசு புலம்பெயர் அமைப்போடு முதற்கட்ட நல்லிணக்கப்பேச்சு!

0
109
Article Top Ad

நீதி அமைச்சர் விசயதாச ராசபக்சவுக்கும் புலம்பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் வாழும் நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனேடியர்கள் அமைப்பின் தமிழ் உறுப்பினர்களுக்கும் இடையே தமிழ்மக்களின் சிக்கல்கள் பற்றிய இணையவழி பேச்சுவார்த்தையொன்று 2022 ஆகட்டு21ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை(21.08.2022) நடைபெற்றது.

இப்பேச்சில் இரண்டு செயற்பாடுகளை புலம்பெயர் அமைப்பான நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனேடியர்கள் அமைப்பினர் முன்வைத்தார்கள்.

1.தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனை எதுவும் இன்றி விடுதலை செய்யவேண்டும்.

2.வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியும் காவல்துறையின் அச்சுறுத்தலை நிறுத்தவேண்டும்.

இவ்விரு செயற்பாடுகளும் தமிழ் சிங்கள மக்களின் நல்லுறவுக்கான அடையாளமாக பச்சைக்கொடியை இலங்கை அரசு காட்டுமிடத்து தொடர்ந்து தமிழ் சிங்கள மக்களின் சிக்கலைத் தீர்ப்பதற்கான அடுத்த கட்டத்திற்கு முன்நகர்த்தமுடியும்.

ஒற்றுமை, தமிழர்களுக்கான சமஉரிமை, அரசியல் சமாதானம் அனைத்தையும் கட்டியெழுப்ப அரசு முன்வரவேண்டும். அதன் முதற்கட்ட பேச்சே நடைபெற்றிருக்கிறது. இதன்போது நீதிஅமைச்சர் தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையற்ற முறையில் விடுதலை செய்வதற்கு துரிதப்படுத்துவதாக உறுதிமொழி வழங்கியுள்ளார்.