சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியை இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்குவதை எதிர்பார்க்கலாம் என இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கடன் வழங்குபவர்களுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை வெற்றிகரமாகவுள்ளது. மற்றும் IMF உடனான வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளுக்கு உட்பட்டு இந்த நிதி வழங்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்காமல், சர்வதேச நாணய நிதியத்திற்கு உறுதியளிக்க முடியுமா என்று கேட்டதற்கு, “நாங்கள் IMF உடன் விவாதிப்பது இதனைத்தான் என பதிலளித்துள்ளார்.
அடுத்த 3-4 ஆண்டுகளுக்கான ஒட்டுமொத்த மைக்ரோ – நிதிக் கொள்கை கட்டமைப்பு மற்றும் நடுத்தர கால கட்டமைப்பில் பணியாளர் அளவிலான ஒப்பந்தத்தை எட்டுவது, மைக்ரோ-ஃபிஸ்கல் கட்டமைப்பில் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கும் நாங்கள் நெறுக்கமாக பேசி வருகிறோம், என்றும் அவர் மேலும் கூறினார்.
இலங்கையில் பணவீக்கம், பணவியல் கொள்கை மற்றும் நாட்டின் உள்நாட்டு கடன் குறித்தும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
பணவீக்கம் குறித்து கருத்து தெரிவித்த கலாநிதி வீரசிங்க, இலங்கையின் பணவீக்கம் தற்போது கீழ்நோக்கிய போக்கை காட்டுவதாக தெரிவித்தார்.
ப்ளூம்பெர்க் தொலைக்காட்சியில் பேசிய ஆளுநர், நேர்காணல் இணைப்பு: https://www.bloomberg.com/news/videos/2022-08-22/sri-lanka-inflation-is-trending-down-weerasinghe (NewsWire)