‘பாதுகாப்பு அமைச்சின் அறையின் மூடிய கதவுக்கு பின்னால் மிக் பரிவர்த்தனையின் கமிஷன் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க பகிரங்க தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மிக் ஒப்பந்தத்தில் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களும் சிங்கப்பூரில் வசிப்பதாகவும், வெளிநாடுகளில் வசிக்கும் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயவின் ஹோட்டல்களுக்கு அவர்களே பணம் செலுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரவி வித்யாலங்காராவிடம் மிக் ஒப்பந்தத்தை குழிதோண்டிப் போட பணம் செலவழித்ததாகவும், மது விருந்தின் பின்னர் விமானப்படைத் தலைவர் மிக் ஒப்பந்தம் தொடர்பில் தனக்குத் தெரியாது என்றும் கூறினார்.
இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
கோத்தபாயவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வந்து அரசியலில் ஈடுபடுத்த முன்னாள் ஜனாதிபதியைச் சுற்றியிருக்கும் அடியாட்கள் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.