வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பயணிக்கும் தொழிலாளர்களுக்காக விமான நிலையத்தில் புதிய நுழைவாயில்!

0
143
Article Top Ad

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பயணிக்கும் இலங்கை தொழிலாளர்களுக்காக பிரத்தியேகமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய பிரமுகர் நுழைவாயில் ஒன்று திறக்கப்படவுள்ளது.

விஐபி நுழைவாயில் போன்று இதற்கு “ஹோப் கேட்” என பெயரிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான இந்த சிறப்பு விஐபி கேட் 2022 செப்டம்பர் 1 ஆம் திகதி திறக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

“வெளிநாட்டு வேலைக்காகப் பயணிக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு விஐபி வசதிகள் வழங்கப்படும் மற்றும் குடிவரவு மற்றும் சுங்க நடைமுறைகள் மூலம் விஐபி நுழைவாயிலில் உள்ள சிறப்புக் குழுக்கள் மூலம் உதவிகளும் வழங்கப்படும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.