’22ஆவது திருத்தச் சட்டமூலம்’ உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பி வைப்பு!

0
116
Article Top Ad

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த 9 மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இன்றைய நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தின் போது பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 22ஆம் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட 9 மனுக்கள் மீதான பரிசீலனை அண்மையில் நிறைவடைந்திருந்தது.

22ஆவது திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துகள், அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி, சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு, கலாநிதி குணதாச அமரசேகர உள்ளிட்ட 9 பேரினால் குறித்த மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. குறித்த மனுக்களில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டிருந்தார்.