Article Top Ad
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ரெலோ கட்சிக்குமிடையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று விசேட சந்திப்போன்று இடம்பெற்றுள்ளது.
அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர், கல்முனை வடக்கு பிரதேச செயலகம், கடற்தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் அவசர பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
டெலோ வின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரனம் மற்றும் தேசிய அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.