Article Top Ad
பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகினார். ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக உள்ளவரே, பிரதமர் பதவியை வகிக்க முடியும். இதன்படி, கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல கட்டங்களாக நடந்து வந்தது.
இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக், வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் இடையே போட்டி நிலவுயது. தலைவர் பதவிக்கான தேர்தலின் கடைசி கட்டத்தில், கட்சி உறுப்பினர்கள், 1.60 லட்சம் பேர் ஓட்டளித்தனர். இதற்கான ஓட்டுப் பதிவு கடந்த 2ம் திகதி நடந்தது.
இந்த தேர்தலில், லிஸ் டிரஸ் வெற்றி பெற்று புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார். 47 வயதாகும் லிஸ் டிரஸ், பிரிட்டனின் 3வது பெண் பிரதமர் ஆவார்.