வடக்கில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க டெலோவிடம் தெரிவித்துள்ளார்.
வடக்கில் நில ஆக்கிரமிப்புகளை உடனடியாக நிறுத்துவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் டெலோ அமைப்பின் உறுப்பினர்களுக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலான தகவல்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக குறிப்பிடும் அந்த அமைப்பின் ஊடகப் பேச்சாளர் கருஸ்வமீன் சுரேந்திரன், அவர்களில் 24 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்களை விடுவிக்கும் திறன் ஜனாதிபதிக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார்..
புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவது மாத்திரம் இந்த நாட்டில் முதலீடு செய்வதற்கு போதாது எனவும் அதற்கு அரசியல் பாதுகாப்புடன் கூடிய கட்டமைப்பு தயாரிக்கப்பட வேண்டுமெனவும் தமது குழு ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதாக அவர் தெரிவித்தார்.