Article Top Ad
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு புதிய இளைஞர் உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளும் பொறுப்புகள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ளன.
கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நாமல் ராஜபக்ஷவுக்கு இந்தப் பணிகளை வழங்கியுள்ளனர்.
வரவிருக்கும் தேர்தல் மற்றும் கட்சியின் அமைப்புக்காக அதிக எண்ணிக்கையிலான செயலமர்வுகளை நடத்தவும் கட்சி முடிவு செய்துள்ளது.
அந்த செயலமர்வுகளும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற உள்ளன.