ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு பூராகவும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகவும், அந்த விஜயங்கள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் மாவட்ட, தொகுதி அமைப்பாளர்களுக்கு உரிய முறையில் அறிவிக்கப்பதுவதில்லை எனவும் ஐதேகவின் ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர்களும் உறுப்பினர்களும் ஜனாதிபதியை சுற்றியே செயற்படுவதால் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அரசியல் ரீதியாக மேலும் சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜனாதிபதி அண்மையில் கதிர்காம விஜயத்தின் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் மற்றும் ஒரு குழுவினர் இவ்வாறு பெரும் சிரமத்திற்கு உள்ளானதாகவும், களுத்துறை மாவட்டத்திலும் அவ்வாறானதொரு சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.