‘தாமரை கோபுர’ நுழைவுச்சீட்டு ; போலியானது என சீனத் தூதரகம் அறிவிப்பு!

0
121
Article Top Ad

சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய ‘தாமரை கோபுர’ நுழைவுச்சீட்டு தொடர்பில் சீனா கருத்து வெளியிட்டுள்ளதுடன், புதிய நுழைவுச்சீட்டு தொடர்பான படத்தையும் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

தாமரை கோபுரம் நாளை அதிகாரபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு பிரவேசிக்கும் நுழைவுச்சீட்டு தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு சர்ச்சைப் பதிவுகள் எழுந்தன.

தாமரைக் கோபுரத்திற்கு பிரவேசிப்பதற்காக நுழைவுச் சீட்டில்,

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலவசமாக கட்டணம் செலுத்தாது பிரவேசிக்க முடியும் எனவும்,

உள்ளூர் பிரஜைகள் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் 500 ரூபா கட்டணமும், வரையறையில்லா அடிப்படையில் 2000 ரூபா கட்டணமும் அறவீடு செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான நுழைவுச்சீட்டு படமும் வெளியாகின.


சிங்களம், ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளில் இந்த நுழைவுச்சீட்டு அச்சிடப்பட்டிருந்தது. அதில் தமிழ் இருக்கவில்லை. இது தொடர்பில் கடும் விமர்சங்கள் எழுந்தன. தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டப்பட்டது.

இந்நிலையில் அந்த நுழைவுச்சீட்டு போலியானது என சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்னர் கொழும்பு துறைமுக நகர் வளாகத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருந்தது. அதனை பின்னர் சீனா சரிசெய்தது.