உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி!

0
143
Article Top Ad

2022இல் மிகக் குறைந்த கச்சா எண்ணெய் விலை நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க சந்தையில் நேற்று கச்சா எண்ணெய் விலை 7 சதவீதம் குறைந்துள்ளது.

அதன்படி நேற்று 86 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் 78 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த டிசம்பர் மாதத்துக்குப் பிறகு இதுவே குறைந்த விலை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு காரணம் அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிப்பதும், வரலாற்றில் இல்லாத அளவுக்கு வட்டி விகிதங்கள் அதிகரிப்பதும் தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.