Article Top Ad
கொழும்பு, தொட்டலங்ககாஜிமா வத்தையில் உள்ள வீட்டுத் தொகுதியில் பாரிய தீ விபத்து சம்பவம் இன்று இரவு பதிவாகியுள்ளது.
சுமார் 12 தீயணைப்பு வாகனங்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு அனுப்பப்பட்டு தீயை அணைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இவ்விபத்து தொடர்பில் ஆராய்ந்து உடனடியான தேவையான தீர்மானங்களை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயகாவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.