ஐ.நா தீர்மானங்களை இலங்கை நீதிமன்றங்கள் கவனத்திற் கொள்வதில்லை

0
111
Article Top Ad

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை எடுக்கும் தீர்மானங்களை நாட்டில் நீதி வழங்கும் அதி உயர் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை என நாட்டின் பிரபல சட்டத்தரணி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

“இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை எடுக்கும் தீர்மானங்கள் குறித்த இலங்கை உயர் நீதிமன்றம் அவதானம் செலுத்தப்போவது இல்லையென இலங்கை உயர் நீதிமன்றம் கூறுகிறது. இதை உங்களால் நம்ப முடிகிறதா. இதுதான் நாட்டின் நிலைமை.”

சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள சட்டத்தரணி நாகாநந்த கொடிதுவக்கு, குற்றவியல் நீதி முறைமைக்கு எதிராக ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்டோர் குறித்து கடந்த 23ஆம் திகதி , நீதிமன்றில் காரணங்களை முன்வைத்த போதே உயர் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, போர்க்குற்றங்கள் மற்றும் கடத்தல்கள் மற்றும் காணாமல் போனோர் உள்ளிட்ட மனித விரோத குற்றங்கள் தொடர்பாக நாட்டில் நீதியை நடைமுறைப்படுத்துவதில் நம்பிக்கையில்லாத வடக்கு-கிழக்கு தமிழ் குற்றம் சாட்டப்பட்ட அரசு மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு எதிராக சர்வதேச விசாரணையை கோரி வருகின்றனர்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, அனைத்துப் பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் களனிப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானப் பிரிவின் மாணவர் செயற்பாட்டாளர் ஹஷான் ஜீவந்த குணதிலக்க ஆகியோர் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் 90 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் கடந்த 23ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.

பிரியந்த ஜயவர்தன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இது தொடர்பான மனுக்களை பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வசந்த முதலிகே உள்ளிட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்ட போது அவர்களை கொடூரமாக தாக்கிய காணொளிக் காட்சிகளை பார்க்க இலங்கை உயர் நீதிமன்றம் தயாராக இருக்கவில்லை என சட்டத்தரணி நாகாநந்த தெரிவித்தார்.

“இவற்றை நாட்டு மக்களுக்கு நாம் வெளிப்படுத்த வேண்டும், ஏனெனில் இந்நாட்டு மக்களின் நீதித்துறை அதிகாரத்தை உறுதிப்படுத்தும் மிக உயர்ந்த நிறுவனம் என்ற வகையில், இந்நாட்டு மக்களின் அடிப்படை உரிமையான இறையாண்மையைப் பாதுகாக்கும் தீவிரப் பொறுப்பு உயர் நீதிமன்றத்துக்கு உள்ளது.”