உயர்பாதுகாப்பு வலயங்கள் தொடர்பில் ஐ நா முக்கியஸ்தர் கவலை!

0
153
Article Top Ad

உயர்பாதுகாப்பு வலயங்கள் என தடைசெய்யப்பட்ட பகுதிகளின் அறிவிப்பு குறித்து தான் ஆழ்ந்த கவலையடைவதாக ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட் வூலே (Clement Voule) தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொதுமக்கள் ஒன்றுகூடுதலையம், ஆர்ப்பாட்டங்கள் மூலமாக எதிர்ப்பை வெளிப்படுத்தும் மக்களின் உரிமையை இலங்கை அதிகாரிகள் மதிக்கவேண்டும் எனவும் அவர் தனது டிவிட்டரில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் எந்த கட்டுப்பாடுகளும் நியாயப்படுத்தக்கூடியவையாக தேவையான அளவிற்கு ஏற்றவையாக காணப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.