நாட்டை வழிநடத்தும் பொறுப்பை மக்கள் விடுதலை முன்னணிக்கு வழங்க மக்கள் தயாராகிவிட்டனர்!

0
122
Article Top Ad

மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தெரிந்துக்கொள்ளாது தொடர்ச்சியாக தவறான தீர்மானங்களை எடுக்கும் அரசாங்கத்துக்கு எதிராகவும் மக்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் போராட்டங்களுக்கு எதிராக அடக்குமுறைகளை பிரயோகிப்பதற்கு எதிராகவும் நாட்டின் இளைஞர் படையினர் எழுச்சியடைய வேண்டும் என்பதுடன், தேசிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்து பயணிக்க தயாராக வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் கொழும்பு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினரும், கொழும்பு ஒருங்கிணைப்பாளருமான கார்மேகம் தினேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

“எமது நாடு மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியாது பொது மக்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நாம் இன்று எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கும், இனங்களுக்கு இடையிலான சமத்துவமின்மைக்கும் கடந்த ஏழு தசாப்தங்களாக நாட்டை ஆட்சிசெய்யும் இந்த அரசியல்வாதிகள் பொறுப்புக்கூறியே ஆகவேண்டும். இவர்களது தவாறான தீர்மானங்கள் மற்றும் அனைத்து துறைகளிலும் இடம்பெற்ற பாரிய ஊழல் – மோசடிகளும், தவாறன அரசியல் கலாசாரமும்தான் நாம் இந்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

தற்போது அதிகாரத்தில் உள்ள எந்தவொரு அரசியல் கட்சியாலோ அல்லது தலைவர்களாலோ நாட்டை ஊழல் – மோசடியற்ற மற்றும் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றியமைக்க முடியாது. அதிகாரத்தில் உள்ள அனைவரும் ஊழல்வாதிகள்தான். இவர்களால் மக்களிடையே ஒற்றுமையை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது. இதனை எமது இளைஞர்கள் உணர்ந்துள்ளனர். அதன் வெளிப்பாடுதான் காலிமுகத்திடலில் வெடித்த போராட்டாமாக வெடித்தது.

நாட்டின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான அரசியல் பார்வையையும் அபிவிருத்திக் கொள்கைகளையும் கொண்டுள்ள ஒரே அரசியல் இயக்கம் மக்கள் விடுதலை முன்னணி மாத்திரமே. இதனால்தான் கடந்தகாலத்தில் மக்கள் விட்ட தவறை உணர்ந்து இன்று மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் பயணத்துக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றனர்.

70ஆண்டுகாலமாக நாட்டை நாசமாக்கிய இந்த ஊழல் ஆட்சியாளர்களுக்கு தகுந்த பாடத்தை கற்பித்து மக்களை சரியான பாதையில் வழிநடத்தக்கூடிய ஊழல் – மோசடிகளுக்கு எதிரான அரசியல் சக்தியாக உள்ள மக்கள் விடுதலை முன்னணியுடன் நாட்டின் இளைஞர் படையினர் கைகோர்க்க வேண்டும். எமது எதிர்காலத்தை நாம்தான் உருவாக்க வேண்டும். இந்த அரசியல்வாதிகள் அனைவரும் ஊழல்மயப்படுத்தப்பட்டவர்கள். இவர்கள் நாட்டில் தொடர்ச்சியாக மத மற்றும் இனவாதத்தை விதைத்து ;அரசியல் செய்யக் கூடியவர்களாகும். நாட்டை வழிநடத்தும் பொறுப்பை மக்கள் விடுதலை முன்னணிக்கு வழங்க மக்கள் தயாராகிவிட்டனர். ஒன்றிணைந்து பயணிப்பதற்கான அழைப்பை எமது இளைஞர் படையினருக்கு விடுகிறேன் – என்றும் அவர் தெரிவித்துள்ளார்.