ரணிலுக்கு முழுமையான ஆதரவு ; மஹிந்த அறிவிப்பு!

0
119
Article Top Ad

நாட்டை முன்னேற்றுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் இருக்கும் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி ரணில், ஒரு சிறந்த பாதைக்கு திரும்பியுள்ளதாக தாம் நம்புவதாக களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தெரிவித்துள்ளார்.

“களுத்துறையில் இருந்து ஒன்றிணைவோம்” என்ற தொனிப்பொருளில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, இந்த பொது பேரணியை ஏற்பாடு செய்திருந்தார்.

இலங்கை இன்று பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், அந்த சவால்களை வெற்றிகொள்ளும் பலம் கட்சிக்கு இருப்பதாகவும், நாட்டு மக்களுக்கு தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனவும் மகிந்த தெரிவித்தார்.