மனோ தலையீடு, கொழும்பில் பொலிஸ் பதிவு நிறுத்தம்

0
102
Article Top Ad

தமிழ் அரசியல் தலைவர்களின் எதிர்ப்பினால் கொழும்பு நகர மக்களிடமிருந்து  தகவல்களை சேகரிக்கும் பொலிஸ் வேலைத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

“காவல்துறையினர் வீடு வீடாகச் சென்று குடும்ப விபரங்களைப் பூர்த்தி செய்யுமாறு படிவத்தைக் கொடுத்தனர். இது தொடர்பாக ஜனாதிபதியுடன் தொலைபேசியில் பேசினேன். அப்படிப்பட்ட தகவல்களை சேகரிப்பது தவறு என்று ஒப்புக்கொண்டார். இந்தப் பணியை உடனடியாக நிறுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிப்பதாக அவர்கள் என்னிடம் உறுதியளித்தார்.” என்கிறார் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்.

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பெரும்பான்மையான தமிழர்கள் வாழும் வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி பிரதேசங்களில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் துண்டுப் பிரசுரம் ஒன்றை வழங்கிய பொலிஸார், அனைத்து குடியிருப்பாளர்களையும் தங்கள் தகவல்களை உள்ளீடு செய்து பதிவு செய்யுமாறு அறிவித்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பொலிஸ் அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரிடம் உண்மைகளை முன்வைத்துள்ளார்.

`இது பொலிஸ் அரசாங்கமல்ல, பொலிஸ் சட்டத்தின் கீழ் பதிவு செய்யுங்கள். விசேடமான காலத்தில் இது இடம்பெறலாம். சட்டத்தை மீறுபவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.“

பொலிஸில் பதிவு செய்ய வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் நகர மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.