டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 12 சுற்றில் அவுஸ்திரேலிய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான போட்டி இன்று (22) சிட்னியில் நடைபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.
அதன்டி, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 03 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
அதன்படி, இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 201 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசினர். இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் விரைவில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தார்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி 17.1 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மேக்ஸ்வெல் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் நியூசிலாந்து 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி, சான்ட்னர் தலா 3 விக்கெட்டும், டிட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.