Article Top Ad
தெற்காசியாவின் முதல் டிஸ்னிலேண்டை (Disneyland) ஹம்பாந்தோட்டையில் திறப்பது குறித்து ஆலோசிக்க Disneyland குழு நவம்பர் மாதம் இலங்கைக்கு வர ஒப்புக்கொண்டுள்ளது.
இது தொடர்பில் ஊடகவியலாளர் ஜமிலா ஹுசைன் ட்வீட் செய்துள்ளார்.
வால்ட் டிஸ்னியின் அழைப்பை ஏற்று 18 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டிற்கான திட்டங்கள் பற்றி விவாதிக்க சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே விரைவில் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
மேலும், இலங்கையில் டிஸ்னிலேண்ட் அமைக்க அழைப்பு விடுத்து வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு ராஜாங்க அமைச்சர் கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்.
இந்த ஆண்டு நவம்பரில் டிஸ்னியின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருமென எதிர்பார்க்கப்படுகிறது.