Article Top Ad
இலங்கையில் கிரிப்டோ நாணயங்களை (cryptocurrency) சட்டப்பூர்வமாக்குவது குறித்து பரிசீலிக்கத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆனால், கிரிப்டோ கரன்சியை சட்டப்பூர்வமாக்குவதால் மட்டும் நாட்டை முன்னேற்ற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், எந்த ஒரு நாடும் வளர்ச்சியடைந்தது வெளிநாட்டு முதலீடுகளால்தான் என்றும், கடன்களால் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
இளைஞர்களுடன் இணையம் ஊடாக நடைபெற்ற மாநாட்டிலேயே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.