ஜனாதிபதி அடுத்தவாரம் எகிப்து பயணம்

0
144
Article Top Ad

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 6ஆம் திகதி எகிப்து செல்லவுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை அந்நாட்டில் நடைபெறவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான 27ஆவது உலக மாநாட்டில் உரை நிகழ்த்துவதற்காக ஜனாதிபதி வெளிநாடு செல்லவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, எகிப்து ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி தனது விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி நாடு திரும்பவுள்ளார்.