அஸூர் எயார், சுவிஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் ஆகிய நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளன
ரஷ்யாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான அஸூர் எயார் மற்றும் பிரான்சின் கொடி கேரியர் – ஏர் பிரான்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த வாரம் முதல் இலங்கைக்கான விமானங்களை மீண்டும் தொடங்கும் என்று சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
அஸூர் எயார் நாளை (நவம்பர் 03) முதல் இலங்கைக்கான விமானங்களைத் தொடங்கும் அதே வேளையில் எயார் பிரான்ஸ் வெள்ளிக்கிழமை (நவம்பர் 04) முதல் விமானங்களைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இன்று ட்விட்டர் செய்தியில், சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, சுவிட்சர்லாந்தின் தேசிய விமான நிறுவனமான சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், நவம்பர் 10 முதல் மே 2023 வரை வாராந்திர விமானங்களை மீண்டும் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இது ஐரோப்பியர் வருகையை மேலும் வலுப்படுத்தும் என்றார்.