ரி20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 12 சுற்றின் ஆட்டத்தில் இன்று இடம்பெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை நெதர்லாந்து அணி தோற்கடித்துள்ளது.
அதன்படி இன்று (06) இடம்பெற்ற போட்டியில் நெதர்லாந்து அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தோல்வியை தொடர்ந்து உலக்கிண்ண அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை தென்னாப்பிரிக்கா அணி இழந்துள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்களைப் பெற்றது.
எனினும், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்புக்கு 145 ஓட்டங்களை மட்டுமே பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் நெதர்லாந்து கிரிக்கெட் அணி வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளதுடன் தென்னாபிரிக்க அணியின் அரையிறுதி கனவு தவிடுபொடியாகியுள்ளது. ஏ பிரிவில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோதும் போட்டி அரையிறுதியை தீர்மானிக்கும் போட்டியாக மாறியுள்ளது.
சிம்பாவே அணியுடனான போட்டியில் இந்தியா தோல்வியுற்றாலும் நெட் ரன்ரேட் விகிதத்தின் பிரகாரம் இந்தியா அரையிறுதிக்கு தெரிவாகுவது உறுதியாகியுள்ளது. பாகிஸ்தானா? பங்களாதேஸா? என்பதுதான் இப்போது கேள்வி.