டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் இன்று முதல் அரையிறுதி போட்டியில் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன் படி களமிறங்கிய நியூசிலாந்து அணி மிட்செல்லின் அதிரடி அரை சதத்தால் 152 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ரிஸ்வான் – பாபர் அசாம் ஜோடி ஆடினர்.
முதல் ஓவரிலேயே பாபர் அசாமுக்கு 0 ரன்னில் கேட்ச் மிஸ் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த ஜோடி அதிரடியாக விளையாடினர். முதல் விக்கெட்க்கு இந்த ஜோடி 105 ரன்கள் குவித்தது.
பாபர் அசாம் 53 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஸ்வான் அரை சதம் அடித்து அவுட் ஆனார். நியூசிலாந்து அணி இந்த போட்டியில் 3 கேட்ச்சுகளை தவற விட்டது. இறுதியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
கடைசி வரை போராடிய நியூசிலாந்து அணி எப்பவும் போல அரையிறுதி வரை வந்து கோப்பை வெல்ல முடியாமல் வெளியேறியது. நாளை 2-வது அரையிறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணி மோதுகிறது. இதில் வெற்றி பெரும் அணி 13-ந் தேதி பாகிஸ்தானுடன் மோதும்.